• Wed. Mar 26th, 2025

24×7 Live News

Apdin News

முழு அடைப்பு போராட்டம்: தமிழகம்-கர்நாடகா இடையே போக்குவரத்தில் பாதிப்பில்லை | karnataka full strike

Byadmin

Mar 23, 2025


கர்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினர் நேற்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தமிழக-கர்நாடகா இடையே வழக்கம்போல வாகனப் போக்குவரத்து இருந்தது.

ஏகி கிரண் மராத்திய அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கர்நாடக மாநிலத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்குக் கன்னட அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர். இப்போராட்டத்தால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க கர்நாடக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. இந்நிலையில் கர்நாடகா-தமிழக இடையில் போக்குவரத்து பாதிக்காமல் இருக்க தமிழக எல்லையான ஜூஜூவாடி மற்றும் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் இருமாநில போலீஸார் நேற்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள், சரக்கு லாரிகள் என அனைத்து வாகனங்களும் வழக்கம்போல ஓசூர் வழியாக பெங்களூருக்குச் சென்றன. அதேபோல, கர்நாடக மாநில பேருந்துகளும் தமிழகத்துக்கு வந்து சென்றன. இதனால், மக்களின் இயல்வு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை.

இதனிடையே, சில கன்னட அமைப்பினர் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அம்மாநில போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.



By admin