ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 47703 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது இதுவரை 48085 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது, 276 கிலோ 374 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 1002 கிலோ 923 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 05 கிலோ 736 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும், 1411 கிலோ 936 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 2899514 கஞ்சா செடிகளும், 65 கிலோ 836 கிராம் குஷ் போதைப்பொருளும், 40 கிலோ 370 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 101201 போதை மாத்திரைகளும், 17 கிலோ 571 கிராம் 861 மில்லிகிராம் மதனமோதக மாத்திரைகளும், 86 கிலோ 373 கிராம் மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டவர்களில் 1130 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

The post “முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் இதுவரை 47,703 பேர் கைது! appeared first on Vanakkam London.