• Wed. Jan 14th, 2026

24×7 Live News

Apdin News

முஸ்தஃபிசுர் நீக்கம் : டி20 உலக கோப்பை, கேகேஆர் மற்றும் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

Byadmin

Jan 14, 2026


முஸ்தஃபிசுர் விவகாரம்: டி20 உலகக் கோப்பை, நைட் ரைடர்ஸ், வங்கதேச கிரிக்கெட் ஆகியவற்றில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கிடையே வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளது.

வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை, ஐபிஎல் ஏலத்தில் 9.2 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(கேகேஆர்) அணி வாங்கியிருந்தது.

சமீப காலமாக இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே அரசியல் பதற்ற நிலை அதிகரித்துவரும் சூழலில், முஸ்தஃபிசுர் ரஹ்மான் அணியில் சேர்க்கப்பட்டதற்கு சில வலதுசாரி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் ரஹ்மானை தங்கள் அணியிலிருந்து விடுவிக்குமாறு நைட் ரைடர்ஸ் நிர்வாகத்திடம் பிசிசிஐ அறிவுறுத்தியது. அதைத்தொடர்ந்து கேகேஆர் அணி முஸ்தஃபிசுரை தங்கள் அணியிலிருந்து விடுவித்தது.

இந்த முடிவு பலதரப்பட்ட விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. “வங்கதேசத்துடன் நல்ல உறவைக் கொண்டிருப்பது இந்தியாவின் தேசிய நலனுக்கு முக்கியம். அதற்கு கிரிக்கெட் உதவியிருக்கும். ஆனால், இந்த முடிவு டாக்காவையும், பாகிஸ்தானையும் நெருக்கமாகக் கொண்டுவரக்கூடிய ஒன்றாக இருக்கிறது” என்று கூறியிருந்தார் எழுத்தாளர் ராமசந்திர குஹா.

By admin