• Sat. Apr 11th, 2026

24×7 Live News

Apdin News

மு.க.ஸ்டாலின் திராவிட இயக்கத்தின் முக்கிய முகங்களில் ஒருவரானது எப்படி?

Byadmin

Apr 11, 2026


தமிழ்நாடு, திமுக, மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

{2026-ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் குறித்த கட்டுரைகளை பிபிசி தமிழ் வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது.)

தி.மு.க தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த சில ஆண்டுகளில் மாநிலக் கட்சியின் தலைவர் என்ற அடையாளத்தைத் தாண்டி, இந்தியா முழுவதும் கவனிக்கத்தக்க ஒரு தலைவராக மாறிவருகிறார்.

2016-ஆம் ஆண்டில் தமிழக சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் தி.மு.க. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டது. இதற்கு சில மாதங்களுக்குப் பிறகு, கட்சியின் தலைவரான மு. கருணாநிதி உடல்நலக் குறைவால் அரசியலில் இருந்து ஒதுங்கிவிட, கட்சியின் பொறுப்பு அவரது மகன் மு.க. ஸ்டாலினின் வசம் வந்தது. கட்சியின் செயல் தலைவராகப் பதவியேற்ற மு.க. ஸ்டாலின், 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து இயங்க ஆரம்பித்தார்.

2016க்கும் 2019க்கும் இடைப்பட்ட அந்த மூன்றாண்டு காலத்தில் அவர் விமர்சனங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவற்றில் பல விமர்சனங்கள் தனிப்பட்ட வகையில் இருந்தன. தலைவர்களை விமர்சிக்க அவர்களுக்கு பட்டப்பெயர் சூட்டி, கேலிப் பொருளாக்கும் அகில இந்தியப் போக்கிற்கு மு.க. ஸ்டாலினும் தப்பவில்லை.

ஆனால், 2019-ஆம் ஆண்டின் தேர்தல் முடிவுகள் வந்தபோது, அவரைப் பற்றிய பார்வை அரசியல் களத்தில் மாறத் துவங்கியது. உடனடியாகவே, 2021-ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலை நோக்கிய அடுத்த பயணத்தைத் துவங்கினார் மு.க. ஸ்டாலின். இப்போது அவர் முதலமைச்சராக பதவியேற்று ஐந்தாண்டுகள் நிறைவடையவிருக்கின்றன.

By admin