• Thu. Nov 14th, 2024

24×7 Live News

Apdin News

மூட்டைப் பூச்சிகளை வீட்டை விட்டு விரட்டியடிக்க எளிய வழிகள்!

Byadmin

Nov 12, 2024


மூட்டைப் பூச்சிகள் நிம்மதியான உறக்கத்திற்கு பெரும் எதிரியாக விளங்குகின்றன. மூட்டைப் பூச்சிகள் கடிப்பதால் சிலருக்கு அலர்ஜியும் ஏற்படுகிறது. இந்த மூட்டைப் பூச்சிகளை விரட்டியடிக்கும் வழிகள் குறித்து பார்ப்போம்.

மூட்டைப் பூச்சிகள் படுக்கை விரிப்புகளின் அடியிலும், தலையணை உறைகள், போர்வைகளுக்குள்ளும் பதுங்கக் கூடியவை.

உறங்கும் முன்னர் படுக்கை விரிப்புகள், தலையணை உறைகளை ஹீட்டர் கொண்டு சூடு படுத்தினால் மூட்டைப்பூச்சிகள் இருந்தால் ஒழியும்.

வேக்கம் க்ளீனர்களை கொண்டு அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்வதன் மூலம் மூட்டைப்பூச்சிகளை ஒழிக்கலாம்.

மூட்டைப்பூச்சிகள் சுவர் இடுக்குகளில் மறையக்கூடியவை. ஆல்கஹாலை தண்ணீர் கலக்காமல் மூலை முடுக்குகளில் ஸ்ப்ரே செய்தால் அவை ஒழியும்.

எஷென்சியல் எண்ணெய்யை அடிக்கடி சுவர் மூலைகளில் தெளித்து வந்தால் மூட்டைப்பூச்சிகள் வெளியேறிவிடும்.

அதிகமாக மூட்டைப்பூச்சிகள் மூலை இடுக்குகளில் குடியேறும். எனவே வீட்டில் விரிசல் ஓட்டைகள் இருந்தால் அடைக்க வேண்டும்.

படுக்கை விரிப்புகள், தலையணையை அடிக்கடி வெயிலில் காய வைப்பது மூட்டை பூச்சிகள் வராமல் தடுக்கும்.

By admin