அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழ் இலக்கிய உலகில் பிரகாசித்த மூத்த படைப்பாளர் நா.யோகேந்திரநாதன் காலமானார்.
யாழ்ப்பாணம், வடமராட்சி, கரணவாயைப் பிறப்பிடமாகக் கொண்ட யோகேந்திரநாதன் (வயது 80) இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். நீர்வேலியில் காலமானார்.
1960 களில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் நேரடியாகப் பங்கெடுத்த அவர் தன் வாழ்நாளின் கடைசி வரை எழுத்துலகில் பிரகாசித்தார்.