0
கடந்த மூன்று நாட்கள் நீடித்த Air Canada தொழிற்சங்க போராட்டம் முடிவுக்கு வருகிறது.
Air Canada நிறுவனமும், அதன் ஊழியர்களைப் பிரதிநிதிக்கும் தொழிற்சங்கமும் தற்காலிக உடன்பாடு செய்துள்ளன.
வேலை நிறுத்தம் முடிவுக்கு வருவதாகத் தொழிற்சங்கம் அதன் Facebook பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
தொழிற்சங்கத்தினர் அனைவரும் மீண்டும் வேலைக்குத் திரும்பும்படி அது கேட்டுக்கொண்டது.
தொடர்புடைய செய்தி : கைவிடப்படாத போராட்டத்தால் Air Canada விமானச் சேவைகள் தொடர்ந்தும் பாதிப்பு!
நிறுவனமும் தொழிற்சங்கமும் முதன்முறை பேச்சு நடத்தின.
வேலை நிறுத்தம் தொடர்ந்தபோது மத்தியத் தொழிலாளர் கழகம் ஊழியர்கள் வேலைக்குத் திரும்ப உத்தரவிட்டது. ஆனால், ஊழியர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.
கனடிய மனிதவள அமைச்சர் தொழிற்சங்கமும் நிறுவனமும் விரைவில் உடன்பாடு செய்துகொள்ள நெருக்குதல் கொடுத்தன.