• Sun. Oct 13th, 2024

24×7 Live News

Apdin News

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் ‘விஸ்வாம்பரா’ படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு

Byadmin

Oct 13, 2024


மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் ‘விஸ்வாம்பாரா’ எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் வசிஷ்டா இயக்கத்தில் உருவாகி வரும் ‘விஸ்வாம்பரா’ எனும் திரைப்படத்தின் சிரஞ்சீவி, திரிஷா, ஆஷிகா ரங்கநாத், குணால் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சோட்டா கே. நாயுடு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார்.

ஃபேண்டஸி எக்சன் என்டர்டெய்னராக தயாராகும்  இந்த திரைப்படத்தை யு வி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் வம்சி ,பிரமோத் , விக்ரம் ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் இந்து மத புராண இதிகாச கதாபாத்திரங்களின் அதீத ஆற்றலும் அது தொடர்பான பிரம்மாண்டமான காட்சியமைப்பும் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

The post ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் ‘விஸ்வாம்பரா’ படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு appeared first on Vanakkam London.

By admin