0
மெக்சிகோவின் ஒக்ஸாகா (Oaxaca) மாநிலத்தில் பயணிகள் ரயிலின் ஒரு பகுதி தடம்புரண்டதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 98 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ நேரத்தில் அந்த ரயிலில் சுமார் 250 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க கடற்படைச் செயலாளரும் மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு செல்ல உள்ளதாக மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷேன்பாம் (Claudia Sheinbaum) அறிவித்தார்.
இந்த ரயில் பாதையை மெக்சிகோ கடற்படை நிர்வகித்து வருகிறது. விபத்துக்கான காரணங்களை கண்டறிய விசாரணை தொடங்கப்படும் என நாட்டின் தலைமைச் சட்ட அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மெக்சிகோ வளைகுடாவையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் இந்த ரயில் பாதை, பயணிகளுடன் சரக்குகளையும் ஏற்றிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை 2023ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.