காணொளி: மெக்ஸிகோ நாடாளுமன்றத்தில் முடியைப் பிடித்து இழுத்து சண்டை
மெக்ஸிகோ நாடாளுமன்றத்தில் எம்.பி-கள் முடியை பிடித்து இழுத்து சண்டையிடும் காட்சி இது.
அங்கு வெளிப்படைத்தன்மைக்கான அமைப்பை கலைப்பதற்கான சட்ட மசோதா ஆளும்கட்சியால் கொண்டு வரப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சி கூட்டணியினர் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினர்.
இது இரு தரப்புகளுக்கு இடையே தள்ளுமுள்ளாக மாறி, அதில் சிலர் முடியை பிடித்து இழுத்தும் சண்டையிட்டனர்.
இந்நிலையில் அமர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு