0
புதுமுக நடிகர் ஆதித்யா மாதவன் நடிப்பில் தயாராகி இருக்கும் :அதர்ஸ்’ எனும் திரைப்படம் மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அதர்ஸ்’ எனும் திரைப்படத்தில் ஆதித்யா மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன், முனிஸ்காந்த், ஹரீஷ் பெராடி ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை கிராண்ட் பிக்சர்ஸ் மற்றும் அப் செவன் வெஞ்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருக்கிறது.
நவம்பர் மாதம் ஏழாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினர் பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” வைத்திய சாலையில் செயன்முறை கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொள்ளும் தம்பதியினரை குறி வைத்து வில்லன் கதாபாத்திரம் நவீன தொழில்நுட்ப அறிவை பாவித்து நூதனமான ஊழலை செய்கிறார்.
இதனை காவல்துறையினரும், சுகாதார துறையினரும் எப்படி ஒருங்கிணைந்து ஒத்துழைத்து கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை .மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் புதுமுக நடிகர் ஆதித்யா மாதவன் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார் ”என்றார்.
