• Mon. Oct 28th, 2024

24×7 Live News

Apdin News

மெட்டில்டா கேம்பெல்: ஆஸ்திரேலியாவில் பாறை இடுக்கில் தலைகீழாக சிக்கிய பெண் என்ன ஆனார்?

Byadmin

Oct 28, 2024


மெட்டில்டா கேம்பெல், ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், NSW Ambulance

படக்குறிப்பு, நியூ சௌத் வேல்ஸ் ஹண்டர் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்து சென்ற போது, பாறை இடுக்கில் தவறி விழுந்தார்.

ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் நடைபயணம் சென்ற போது கீழே விழுந்த செல்போனை எடுக்க முயன்றபோது, இரு பாறைகளுக்கு நடுவே பல மணிநேரம் தலைகீழாக சிக்கிக்கொண்டார்.

மெட்டில்டா கேம்பெல் எனும் அப்பெண் இம்மாத தொடக்கத்தில் நியூ சௌத் வேல்ஸ் ஹண்டர் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்து சென்ற போது, பாறை இடுக்கில் தவறி விழுந்தார்.

அவரை சுமார் ஏழு மணிநேரம் போராடி மீட்க வேண்டியிருந்தது. பாறைகளை நகர்த்துவது உட்பட “சவாலான” மீட்புப்பணிகளை அவசர சேவை பிரிவினர் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

500 கிலோ எடையுள்ள பாறையை வெளியே எடுத்த போதிலும், அப்பெண் சிக்கியிருந்த “எஸ்” வடிவிலான வளைவிலிருந்து அவரை மீட்க மேலும் பல பணிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

By admin