• Sat. Aug 23rd, 2025

24×7 Live News

Apdin News

மெட்ராஸ் தினம்: சென்ட்ரலை விட பழமையான தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம்

Byadmin

Aug 23, 2025


காணொளிக் குறிப்பு, தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையத்துக்கு இவ்வளவு பெருமைகளா?

காணொளி: சென்ட்ரலை விட பழமையான தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையத்தின் பெருமைகள்

இது ராயபுரம் ரயில் நிலையம், இங்கிருந்து தான் தென்னிந்தியாவின் முதல் ரயில் இயக்கப்பட்டது.

இது 1856ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி அப்போதைய மெட்ராஸ் மாகாண கவர்னர் ஹாரிஸால் திறந்து வைக்கப்பட்டது. ஜூலை 1ஆம் தேதி, முதல் ரயில் ராயபுரத்திலிருந்து வாலாஜாபேட்டை வரை இயக்கப்பட்டது.

பிரிட்டிஷ் இந்தியா ஆட்சியில் ஒரு கிராமமாக இருந்த ராயபுரத்தில், அரண்மனை போல் இந்த ரயில் நிலையம் கட்டப்பட்டது.

ஒரு கிராமத்தில் தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் அமைக்கப்பட்டதற்கு காரணம் என்ன?

18ஆம் நூற்றாண்டின் இறுதியில் புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து வெளியேறிய ஆங்கிலேய தனியார் வர்த்தக நிறுவனங்கள் இந்தப் பகுதியிலிருந்த ‘First line beach’ சாலைக்கு மாற்றப்பட்டன. அந்நிறுவனங்களின் வசதிக்காகவே இங்கு ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. அருகிலேயே துறைமுகமும் அமைக்கப்பட்டது. இந்த First line beach தான் இப்போது ராஜாஜி சாலை என அழைக்கப்படுகிறது.

1873இல் சென்ட்ரல் ரயில் நிலையம் செயல்படத் தொடங்கியபின் ராயபுரம் ரயில் நிலையத்தின் முக்கியத்துவம் குறைந்தது. காலப்போக்கில் சிதிலமடைந்த இந்த ரயில் நிலையம், 2005இல் புதுப்பிக்கப்பட்டது.

169 ஆண்டுகளைக் கடந்து இன்றும் செயல்பாட்டில் இருக்கும் ராயபுரம் ரயில் நிலையம், இந்தியாவின் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றாகவும், மெட்ராஸின் அடையாளங்களில் ஒன்றாகவும் உள்ளது.

By admin