• Tue. Sep 9th, 2025

24×7 Live News

Apdin News

மெட்ரோ நிலையங்களில் கூடுதல் இணைப்பு வாகனம்: தனி துணை நிறுவனம் அமைக்க முடிவு | Additional connecting vehicle at metro stations

Byadmin

Sep 9, 2025


சென்னை: சென்​னை​யில் தற்​போது 2 வழித்​தடங்​களில் 54 கி.மீ. தொலை​வுக்கு மெட்ரோ ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. மெட்ரோ ரயில் பாது​காப்​பான, விரை​வான, சொகு​சான பயணம் என்​ப​தால், இதில் கூட்​டம் அதி​கரித்து வரு​கிறது. தற்​போது, மெட்ரோ ரயில்​களில் தினசரி 3 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பயணிக்​கின்​றனர்.

2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டப் பணி​கள் முடி​யும்​போது, பயணி​கள் எண்​ணிக்கை பல மடங்கு அதி​கரிக்​கும். எனவே, பயணி​கள் தடை​யின்றி வந்து செல்ல வசதி​யாக, இணைப்பு வாகன வசதியை அதி​கரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் திட்​ட​மிட்​டுள்​ளது. மேலும், கூடு​தல் இணைப்பு வாக​னத்தை இயக்​கும் வித​மாக, தனி​யாக துணை நிறு​வனம் அமைக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: மெட்ரோ ரயில் பயணி​களின் வருகை அதி​கரிக்க இணைப்பு வாகன வசதி முக்​கிய​மான​தாக இருக்​கிறது. மாநகர பேருந்​துகள், சிற்​றுந்​துகள் மட்​டுமே போதாது. எனவே, தனி​யாக புதிய துணை நிறு​வனம் தொடங்​கப்பட உள்​ளது. இதற்​காக மாநில போக்​கு​வரத்து ஆணை​யத்​திடம் விண்​ணப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. இதற்​கான ஒப்​புதல் கிடைத்​த வுடன், கால்​டாக்​சி, ஆட்​டோ, வேன் போன்ற இணைப்பு வாக​னங்​கள் ஒப்​பந்த அடிப்​படை​யில் இயக்​கப்​படும். அதாவது, 500 வாக​னங்​களை இயக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. முதல்​கட்​ட​மாக 150 இணைப்​பு ​வாக​னங்​கள்​ ​வாங்​கப்​படும்​. இவ்​​வாறு அவர்​கள்​ கூறினர்​.



By admin