• Tue. Oct 21st, 2025

24×7 Live News

Apdin News

மென்செஸ்ட்டர் சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்களை சந்தித்த மன்னர் சார்லஸ்!

Byadmin

Oct 21, 2025


மென்செஸ்ட்டர் யூத ஆலயத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்தவர்களை இங்கிலாந்து மன்னர் சார்லஸ் சந்தித்தார்.

இருவர் கொல்லப்பட்ட இந்த பயங்கரமான சம்பவத்தின் தனது துக்கத்தை மன்னர் வெளிப்படுத்தினார்.

தாக்குதலில் காயமடைந்த மூவர் உட்பட யூத ஆலயத் தலைவர்கள் மற்றும் யூத சமூக உறுப்பினர்களை மன்னர் இதன்போது சந்தித்தார்.

கடந்த 2ஆம் திகதி நடத்த இந்தத் தாக்குதலில் மெல்வின் கிராவிட்ஸ் (Melvin Cravitz) மற்றும் அட்ரியன் டவுல்பி (Adrian Daulby) ஆகியோர் கொல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி : மென்செஸ்ட்டர் சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு; கொல்லப்பட்ட தாக்குதலாளியின் பெயர் வெளியானது!

மன்னர் சார்லஸ் ஒரு பாரம்பரிய யூத அடையாளமாக அணியப்படும் ‘கிப்பாவை’ (kippah) அணிந்து கொண்டு, தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த மூன்று பேரையும் சந்தித்தார்.

காரால் மோதப்பட்டு படுகாயமடைந்த தொழில்முறை பாதுகாவலர் பெர்னார்ட் அஜிமேங் (Bernard Agyemang) சக்கர நாற்காலியில் யூத ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

மன்னர் இந்தக் குழுவிடம், “நான் எவ்வளவு துக்கமாக இருக்கிறேன் என்று சொல்ல முடியாது” என்று கூறினார். பின்னர், ஏனைய சபையினரைச் சந்தித்தபோது, இது “எதிர்பாராத விதமாக வந்த ஒரு பயங்கரமான விஷயம்” என்று கூறினார்.

சுமார் 150 நல்விரும்பிகள் யூத ஆலயத்திற்கு வெளியே அணிவகுத்து நின்று, மன்னரைப் பார்த்தனர்.

மென்செஸ்ட்டர் சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்களை சந்தித்த மன்னர் சார்லஸ்மென்செஸ்ட்டர் சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்களை சந்தித்த மன்னர் சார்லஸ்

By admin