• Fri. Apr 10th, 2026

24×7 Live News

Apdin News

மெலனியா டிரம்புக்கு எப்ஸ்டீனுடன் தொடர்பா? அமெரிக்க முதல் பெண்மணியின் அரிதான நடவடிக்கை

Byadmin

Apr 10, 2026


மெலனியா டிரம்ப், எப்ஸ்டீன், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், இருவரையும் இணைத்து பேசும் எந்தவொரு கூற்றும் “இன்றே முடிவுக்கு வர வேண்டும்” என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை நடத்திய ஒரு திடீர் பத்திரிகையாளர் சந்திப்பில் , எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாடாளுமன்ற விசாரணைகளை நடத்த வேண்டும் என்று அமெரிக்காவின் முதல் பெண்மணி அழைப்பு விடுத்தார்.

எப்ஸ்டீன் தன்னை டொனால்ட் டிரம்புக்கு அறிமுகப்படுத்தினார் என்ற ஆன்லைன் வதந்திகளையும் அவர் மறுத்தார். அவற்றை “எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் தீய எண்ணம் கொண்ட முயற்சிகள்” என்று அவர் குறிப்பிட்டார்.

மெலனியாவின் அறிவிப்புக்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

எப்ஸ்டீன் குறித்து மெலனியா ஓர் அறிக்கை வெளியிடுவார் என்று அவரது அலுவலகத்திலிருந்து முன்கூட்டியே எந்த அறிகுறியும் இல்லை. அவரது கருத்துக்கள் வெள்ளை மாளிகையின் தினசரி அட்டவணையில் சேர்க்கப்பட்ட போதும், அது இந்தத் தலைப்பைப் பகிர்ந்து கொள்ளவில்லை.

By admin