• Wed. Apr 1st, 2026

24×7 Live News

Apdin News

மெஸ்ஸர் செபலோட்ஸ்: ஒரு எறும்பை 220 டாலருக்கு வாங்கும் நபர்கள் என்ன செய்கிறார்கள்?

Byadmin

Mar 31, 2026


மெஸ்ஸர் செபலோட்ஸ்: ஒரு எறும்பை 220 டாலருக்கு வாங்கும் நபர்கள் என்ன செய்கிறார்கள்?

பட மூலாதாரம், Dino Martins

படக்குறிப்பு, ராட்சத ஆப்பிரிக்க அறுவடை எறும்புகள் – இங்கே கென்யாவில் காணப்படுபவை – உலகம் முழுவதும் உள்ள சேகரிப்பாளர்களிடையே மிகவும் பிரபலமானவை.”

கென்யாவில் இப்போது எறும்புகள் பறந்து கொண்டிருக்கின்றன.

இந்த மழைக்காலத்தில், கென்யாவின் ரிஃப்ட் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு அமைதியான விவசாய நகரமான கில்கிலைச் (Gilgil) சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான எறும்புப் புற்றுகளிலிருந்து எறும்புக் கூட்டங்கள் வெளியேறுவதைக் காண முடிகிறது. இந்த நகரம் தற்போது ஒரு வளர்ந்து வரும் சட்டவிரோத வர்த்தகத்தின் மையமாக உருவெடுத்துள்ளது.

இனச் சேர்க்கையின் போது, சிறகுள்ள ஆண் எறும்புகள் ராணிகளை கருத்தரிக்கச் செய்ய கூட்டை விட்டு வெளியேறுகின்றன; ராணிகளும் இந்த நேரத்தில் பறக்கின்றன. ஒரு வெளியே பார்க்கத்தக்க வகையிலான பெட்டிக்குள் (Enclosure) எறும்புகள் சுறுசுறுப்பாக ஒரு காலனியை உருவாக்குவதைக் கவனிக்கும் செல்லப்பிராணி மோகத்தைப் பயன்படுத்தி, வளர்ந்து வரும் உலகளாவிய கருப்புச் சந்தையின் மையத்தில் இருக்கும் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபடுவோரிடம் விற்பனை செய்ய, ராணி எறும்புகளை சேகரிக்க இது சரியான நேரமாகும்.

சர்வதேச எறும்பு சேகரிப்பாளர்களால் மிகவும் மதிக்கப்படுவது ‘ராட்சத ஆப்பிரிக்க அறுவடை எறும்பு’ (Giant African harvester ant) ராணிகள் தான். இவை பெரியவை மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆன்லைனில் இயங்கும் கருப்புச் சந்தையில் ஒரு ராணி எறும்பு 220 டாலர் (சுமார் 21 ஆயிரம் ரூபாய்) வரை விலை போகிறது.

கருவுற்ற ஒரு ராணி எறும்பால் ஒரு முழு காலனியையே உருவாக்க முடியும் மற்றும் அது பல தசாப்தங்களாக வாழக்கூடியது. ஸ்கேனர்கள் பொதுவாக கரிமப் பொருட்களைக் கண்டறியாது என்பதால், இவற்றை அஞ்சல் வழியாக எளிதாக அனுப்பிவிட முடிகிறது.

By admin