• Sat. Sep 6th, 2025

24×7 Live News

Apdin News

மேட்டூர் அணை 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம் | Mettur Dam Surplus water discharge through 16 sluice gates stopped

Byadmin

Sep 5, 2025


மேட்டூர் / தருமபுரி: காவிரி ஆற்​றில் நீர்​வரத்து அதிகரித்​த​தால் மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் முழு கொள்ள​ளவான 120 அடியை கடந்த 2-ம் தேதி 6-வது முறை​யாக எட்​டியது. அணை​யின் பாது​காப்பு கரு​தி, அணைக்கு வரும் நீர் முழு​வதும் காவிரி​யில் வெளியேற்றப்​பட்டு வந்​தது.

அணைக்கு நேற்று முன்​தினம் இரவு விநாடிக்கு 29,300 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 23,300 கனஅடி​யாக குறைந்​தது. இதையடுத்​து, கடந்த 2 நாட்​களுக்கு பிறகு 16 கண் மதகு​கள் வழி​யாக உபரிநீர் வெளி​யேற்​றப்​படு​வது நேற்று காலை 8 மணி முதல் நிறுத்​தப்​பட்​டது.

அதே​நேரத்​தில், அணை​யின் நீர்​மின் நிலை​யங்​கள் வழி​யாக காவிரி டெல்டா பாசனத்​துக்கு விநாடிக்கு 22,500 கனஅடி​யும், கால்​வாய் பாசனத்​துக்கு விநாடிக்கு 800 கனஅடி​யும் தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது.

அணை நீர்​மட்​டம் நேற்று 120 அடி​யாக​வும், நீர் இருப்பு 93.47 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது. இதனிடையே, தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 18 ஆயிரம் கனஅடி​யாக குறைந்​தது.



By admin