1
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சமாதானப் பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோவுக்கு வந்தால் ‘100% பாதுகாப்பாக’ இருப்பார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதி அளித்துள்ளார்.
ரஷ்யாவின் வடிவோஸ்டாக்கில் நடைபெற்ற கிழக்குப் பொருளாதார மன்றத்தில் பேசிய புடின், இந்தச் சந்திப்பு ‘பாதுகாப்புக்கான நிபந்தனைகளை’ வழங்கும் என்றும் மாஸ்கோவே சிறந்த இடம் என்றும் கூறினார்.
மேலும், உக்ரைனில் எந்தவொரு வெளிநாட்டு அமைதி காக்கும் படையும் (peacekeeping force) சட்டபூர்வமான தாக்குதல் இலக்காகக் கருதப்படும் என்று மேற்கத்திய நாடுகளுக்கு புடின் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
ஐரோப்பிய தலைவர்கள் ஒரு சாத்தியமான அமைதி காக்கும் படைக்கு தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் தெரிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு புடின் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், 26 உக்ரைன் நட்பு நாடுகள் சண்டை முடிந்ததும் உக்ரைனுக்கு “மறுஉறுதிப்படுத்தும் படையாக” படைகளை அனுப்ப உறுதியளித்துள்ளதாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், நேட்டோ படைகள் உக்ரைனில் அமைதி காக்கும் படையின் ஒரு பகுதியாக இருப்பதை மாஸ்கோ ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்று தொடர்ந்து கூறி வருகிறது.