• Sun. Jan 25th, 2026

24×7 Live News

Apdin News

மேற்கு இலண்டனில் ஈ-ஸ்கூட்டர் மோதி முதியவர் படுகாயம்: ஓட்டுநர் தப்பியோட்டம்

Byadmin

Jan 25, 2026


மேற்கு இலண்டனில் ஈ-ஸ்கூட்டர் மோதி 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து The Vale, Ealing பகுதியில் நிகழ்ந்ததாக Metropolitan Police தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) பிற்பகல் சுமார் 2.30 மணியளவில், மேற்கு நோக்கி சென்ற ஈ-ஸ்கூட்டர் ஒன்று பாதசாரியுடன் மோதியதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாரும், அவசர மருத்துவப் பணியாளர்களும் காயமடைந்த முதியவருக்கு முதல் சிகிச்சை அளித்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

விபத்துக்குப் பிறகு, ஈ-ஸ்கூட்டர் ஓட்டுநர் சிறிது நேரம் நின்ற பின்னர் ஸ்கூட்டரை அங்கேயே விட்டுவிட்டு, கால்நடையாக தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், பொதுமக்களின் உதவியை நாடுவதாகவும் Serious Collision Investigation Unit சார்பில் விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

விபத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தகவல் வழங்க விரும்புவோர் 0207 960 8041 என்ற எண்ணில் Serious Collision Unit-ஐ அல்லது 101 என்ற எண்ணில் CAD4159/23Jan என்ற குறிப்பு எண்ணை மேற்கோள் காட்டி தொடர்புகொள்ளலாம்.

By admin