• Sun. Apr 20th, 2025

24×7 Live News

Apdin News

மேற்கு வங்கம்: வக்ஃப் சட்டத்துக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது எப்படி?

Byadmin

Apr 13, 2025


வக்ஃப் சட்டத்துக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது எப்படி?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, முர்ஷிதாபாத்தில் நடந்த வன்முறையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் (திருத்தச்) சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், சனிக்கிழமை முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டம் தீவிரமானது. அதனால் ஏற்பட்ட வன்முறையால் மூன்று பேர் உயிரிழந்தனர்.

மாணவர் இஜாஸ் அகமது (17), ஹர்கோவிந்த தாஸ் (65) மற்றும் சந்தன் தாஸ் (35) ஆகிய மூவரும் இதில் உயிரிழந்ததாக மாநில அரசு வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன.

ஹர்கோவிந்த தாஸ் என்பவரின் மகன்தான் சந்தன் தாஸ். இருவரும் சொற்ப வருமானத்துடன் ஆடுகள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக அவர்களது வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் கூறுகின்றனர்.

இந்த வன்முறையில் இன்னும் பலர் காயமடைந்துள்ளனர், மேலும் இதுதொடர்பாக 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் அமைதியை கடைபிடிக்குமாறு மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.

By admin