• Thu. Dec 19th, 2024

24×7 Live News

Apdin News

மொசாம்பிக் நாட்டில் சூறாவளி பாதிப்பு; 34 பேர் உயிரிழப்பு

Byadmin

Dec 19, 2024


மொசாம்பிக் நாட்டின் மணிக்கு 160 மைல்கள் வேகத்தில் வீசிய கடுமையாக சூறாவளி காரணமாக நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட 3 மாகாணங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுவரை சூறாவளி பாதிப்புக்கு 34 பேர் பலியாகி உள்ளனதுடன், 319 பேர் காயமடைந்தும் 25 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் ஆபத்து மேலாண்மை மற்றும் குறைப்புக்கான தலைவர் லூயிசா மெக் தெரிவித்துள்ளார்.

கபோ டெல்கடோ மாகாணத்தில் உள்ள மெகுபி மாவட்டத்தில் கடந்த ஞாயிறு மற்று திங்கட்கிழமையும் சூறாவளி தாக்கம் இருந்ததுடன், கனமழை மற்றும் பலத்த காற்று வீசியதில் வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்தன.

சூறாவளியால் இதுவரை 23,600 வீடுகள் மற்றும் 170 மீன்பிடி படகுகள் சேதமடைந்து உள்ளதுடன், சூறாவளி, ஜிம்பாப்வே அருகே நேற்று மாலை வலுவிழக்கும் என கூறப்பட்டது.

இந்த நிலையில், சூறாவளியால் ஜிம்பாப்வே நாடும் பாதிக்கப்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

By admin