• Wed. Jul 1st, 2026

24×7 Live News

Apdin News

மோங்லா ஒப்பந்தம்: வங்கதேசத்தில் இந்தியாவுக்கு பதிலாக சீனாவுக்கு கிடைத்த துறைமுக திட்டம் ஏன் பேசு பொருளாகிறது?

Byadmin

Jul 1, 2026


சீனா, வங்கதேசம், ஒப்பந்தம், இந்தியா

பட மூலாதாரம், Facebook/Tarique Rahman

படக்குறிப்பு, வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் சீனப் பயணம் நிறைவடைந்தது. இரு நாடுகளும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன, அதில் மோங்லா துறைமுகம் மற்றும் தீஸ்தாச் திட்டமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டு அறிக்கை வெளியான பிறகு, இந்தியாவில் இந்த இரு விவகாரங்கள் குறித்துத்தான் அதிக அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

மோங்லா வங்கதேசத்தின் இரண்டாவது மிகப்பெரிய கடல் துறைமுகமாகும். இங்கு சீனா பொருளாதார மண்டலத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

உண்மையில், இந்த நிலத்தை சீனாவிற்குப் பதிலாக இந்தியாவிற்கு வழங்க முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 2025-ஆம் ஆண்டில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்கியது

தற்போது சீனாவிற்கு இந்தத் திட்டம் கிடைப்பது, வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதன் இருப்பை மேலும் வலுப்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது. சீனா ஏற்கனவே பாகிஸ்தானின் குவாடர் முதல் ஆப்பிரிக்காவின் ஜிபூட்டி வரை பல துறைமுகங்களில் முதலீடு செய்துள்ளது.

By admin