• Thu. Dec 26th, 2024

24×7 Live News

Apdin News

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் – வள்ளிமலையில் தரிசனம் செய்த பாஜக செயலாளர்

Byadmin

Dec 21, 2024


நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், சமீபத்தில் ஊடகங்களில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது. அதில் 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தொடர்ந்து பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் எனக்கூறப்பட்டது.

இதனிடையே, பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதையொட்டி, மூன்றாவது முறையாக மோடியே பிரதமராக வர வேண்டும் என கோயிலில் வழிபட்டேன்.”

“வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி இதனை நிறைவேற்றி தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. கன்னியாகுமரியில் பிரதமர் தியானம் செய்வதில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்து வருகின்றனர். இதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்த மாட்டோம். 400க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்று, நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் நாற்காலியில் அமர்ந்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வார்,” என்று தெரிவித்தார்.

By admin