• Tue. Jan 7th, 2025

24×7 Live News

Apdin News

மோதி – டிரம்ப் உறவு எப்படி இருக்கப் போகிறது? 2025இல் இந்தியா சந்திக்கவுள்ள 6 சவால்கள் என்ன?

Byadmin

Jan 2, 2025


நரேந்திர மோதி மற்றும் எஸ். ஜெய்சங்கர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

  • எழுதியவர், அபினவ் கோயல்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

ரஷ்யா-யுக்ரேன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் போர், அண்டை நாடான வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம், அமெரிக்காவில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் மற்றும் கொந்தளிப்பில் மூழ்கியுள்ள மத்திய கிழக்கு நாடுகள்.

இந்தியாவுக்கு 2025ஆம் ஆண்டு இந்தப் பிரச்னைகள் கொண்டு வரப்போகும் சவால்களைத் தீர்ப்பது எளிதானது அல்ல.

இந்த ஆண்டு, குவாட் மாநாட்டை நடத்தவுள்ளது. குவாட் என்பது ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள் இடையிலான கூட்டமைப்பு. இந்தியா – ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாட்டையும் நடத்த வாய்ப்புள்ளது.

அதேவேளையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோதி சீனா செல்லவிருக்கிறார். அதோடு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியா வரக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.

By admin