• Thu. Dec 26th, 2024

24×7 Live News

Apdin News

மோதி – மோகன் பாகவத் இருவரும் மறைமுக யுத்தமா? கோவில் – மசூதி பற்றி பாகவத் பேசியது என்ன?

Byadmin

Dec 25, 2024


மோகன் பாகவத், RSS, பாஜக

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மோகன் பாகவத்

  • எழுதியவர், அபினவ் கோயல்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

“இந்துக்கள் ராமர் கோவில் மீது பக்தி கொண்டுள்ளனர். ஆனால் ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு புதிய இடங்களில் இதேபோன்ற பிரச்னைகளை எழுப்புவதன் மூலம் இந்துக்களின் தலைவர்களாக மாறலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். இதை ஏற்க முடியாது.”

நாட்டில் கோவில்கள் மற்றும் மசூதிகள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ள இந்த நேரத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவர் மோகன் பாகவத் இவ்வாறு கூறியுள்ளார்.

வழிபாட்டுத் தலங்கள் சட்டம் குறித்த விவாதம் நடந்து வரும் நிலையில், சம்பல், மதுரா, அஜ்மீர், காசி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் உள்ள மசூதிகள் இருந்த இடத்தில் இதற்கு முன்பு கோயில்கள் இருந்தன என்று பலர் கூறி வருகின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

டிசம்பர் 19 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று புனேயில் ‘இந்து சேவா மஹோத்சவ்’ தொடக்க விழாவில் பேசிய மோகன் பாகவத் இந்த சூழல் குறித்து கவலை தெரிவித்தார். கோவில்-மசூதி குறித்த பிரச்னைகளை சரி செய்வது பற்றி அவர் மீண்டும் பேசினார்.

By admin