பட மூலாதாரம், IMD
வங்கக்கடலில் தீவிர புயலாக உருவெடுத்துள்ள மோன்தா புயல் இன்று மாலை அல்லது இரவில் ஆந்திராவில் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆந்திரா, ஒடிசா, ஏனாம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சூறாவளி எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
“மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவான மோன்தா புயலானது வடக்கு-வடமேற்காக நகர்ந்து இன்று (அக்டோபர் 28) இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் தீவிர புயலாக வலுப்பெற்றது. அந்தப்புயல், காலை 8.30 மணியளவில் ஆந்திராவின் மச்சிலிபட்டினத்துக்கு தெற்கு-தென்கிழக்கே 160 கிலோமீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்துக்கு தெற்கு-தென்கிழக்கே 240 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருக்கிறது.
தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் இப்புயல் ஆந்திராவில் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டணம் மற்றும் கலிங்கபட்டணம் இடையே இன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது மணிக்கு 90–100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம். அது மணிக்கு 110 கிலோமீட்டர் வரையிலும் வேகமடையலாம்” என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், IMD
தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?
அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.