• Sat. Aug 23rd, 2025

24×7 Live News

Apdin News

மோர்யார் குட்டா: இந்தியாவின் ஹைர் பென்கல் கிராமத்தில் குள்ள மனிதர்கள் வாழ்ந்தனரா? மலை மீதுள்ள 1,000 வடிவங்களால் தீராத மர்மம்

Byadmin

Aug 23, 2025


மோர்யார் குட்டா, ஹைர் பென்கல், குள்ள மனிதர்கள், இந்தியா, கர்நாடகா

பட மூலாதாரம், Bansarai Kamdar

படக்குறிப்பு, கர்நாடகாவில் 2500 ஆண்டு பழமையான கிட்டத்தட்ட 1000 பெருங்கல் கட்டமைப்புகள் ஹைர் பென்கல்லில் மலை மீது உள்ளன.

    • எழுதியவர், பன்சாரி காம்தார்
    • பதவி,

கர்நாடகாவில் ஒரு மலை மீது 2500 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் பெருங்கற்களால் உருவாக்கப்பட்ட வடிவங்கள் உள்ளன. இவை எதற்காக கட்டப்பட்டன என்று இப்போதும் தெளிவாக யாருக்கும் தெரியவில்லை. இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி கொண்ட “குள்ள மனிதர்கள்” இவற்றை உருவாக்கியதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.

ஹைர் பென்கல் எனும் கிராமத்தை முதன் முதலில் பார்க்கும் போது கர்நாடகாவின் செழிப்பான உட்புற மாவட்டங்களில் உள்ள ஒரு சாதாரண கிராமம் போலவே தோன்றும். மலைகள், மாந்தோப்புகள், சிறிய செங்கற்சூளைகள், வயல்கள், அதனருகே ஒரு கால்வாய் என கிராமப்புற தென்னிந்தியாவின் அமைதியான வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.

ஆனால் 90 நிமிட மலைப் பயணத்துக்கு பிறகு நிலைமை மாறுகிறது. அந்த மலைப்பாங்கான நிலத்தில் ஏறிச் சென்றால் அது என்னை “மோர்யார் குட்டா” என்ற இடத்துக்கு இட்டுச் சென்றது. உள்ளூர் கன்னட மொழியில் “குள்ள மனிதர்களின் மலை” என்று அதற்கு அர்த்தமாகும். கிரானைட் பாறைகள் நிறைந்த இந்த சமதளத்தில், வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய காலத்தில் (எழுத்து வடிவிலான ஆவணங்களுக்கு முந்தைய காலம்) பெருங்கற்களாலான கிட்டத்தட்ட 1000 வடிவங்கள் உள்ளன. இவை 2500 ஆண்டுகளுக்கும் மேலாக இங்குள்ளன.

அந்த காட்சியே பிரமிப்பாக இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வீடுகளை போன்று தோற்றமளிக்கும் மாபெரும் கற்களாலான அறைகள் மற்றும் கற்களாலான வட்டங்கள் அந்த பகுதி முழுவதும் இருந்தது. இதுவே இந்தியாவின் மிகப் பெரிய, மிகப் பழமையான இடுகாடாகும். இது ஆங்கிலத்தில் necropolis -இறந்தவர்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது.

By admin