0
பான் இந்திய நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் யஷ் கதையின் நாயகனாக அதிரடியான எக்சன் அவதாரத்தில் தோன்றும் ‘டாக்ஸிக்’ எனும் திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்திருக்கும் ராயா எனும் கதாபாத்திரத்திற்கான அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.
நடிகையும், இயக்குநருமான கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ எனும் திரைப்படத்தில் யாஷ், நயன்தாரா , கியாரா அத்வானி, ருக்மணி வசந்த் , தாரா சுதாரியா, ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார்.
வித்தியாசமான கதை கள பின்னணியில் கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகைகளின் கதாபாத்திர தோற்றப் பார்வையை தொடர்ந்து வெளியிட்ட படக்குழுவினர் இன்று நடிகர் யஷ்ஷின் பிறந்தநாள் முன்னிட்டு அவர் நடித்திருக்கும் ராயா எனும் கதாபாத்திரத்தின் அறிமுக காணொளியை வெளியிட்டுள்ளனர்.
இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அதிரடியான எக்சனுடன் இருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் உள்ளிட்ட சர்வதேச மொழியிலும் வெளியாகிறது.