• Mon. Oct 7th, 2024

24×7 Live News

Apdin News

யாழில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல்

Byadmin

Oct 7, 2024


அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுக்களை இன்று திங்கட்கிழமை (7) கையளித்தனர்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இன்று பிற்பகல் 12 மணியளவில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இத்தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் களமிறங்குகிறது.

வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு முன்னர் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இத்தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக வேட்பாளர் பட்டியலில் செல்வராஜா கஜேந்திரன், நடராஜா காண்டீபன், செபஸ்ரியாம்பிள்ளை மேவிஸ் ஜீன்சியா, மகாதேவன் நடனதேவன், கனகரட்னம் சுகாஷ், வாசுகி சுதாகர், கஜேந்திரகுமார் காங்கேசர் பொன்னம்பலம், தங்கவேல் ஜெகதீஸ்வரன், ஞான குணேஸ்வரி கமலச்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

By admin