• Sat. Aug 16th, 2025

24×7 Live News

Apdin News

யாழில் இந்திய அமைதிப்படையின் நினைவு தூபியில் இந்திய துணைத்தூதுவர் எஸ்.சாய் முரளி அஞ்சலி

Byadmin

Aug 16, 2025


யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இந்திய அமைதிப் படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் , இந்திய துணைத்தூதுவர் எஸ். சாய் முரளி அஞ்சலி செலுத்தினார்.

இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினமான இன்றைய தினம்(15) வெள்ளிக்கிழமை பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்திய இராணுவத்தினரின் நினைவிடத்திற்கு இந்திய தூதுவர் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அதன் போது, யாழ் . மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக குமாரவும் அஞ்சலி செலுத்தினார்.

விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட “பவன்” நடவடிக்கை மற்றும் 1987 தொடக்கம் 1990 ஆம் ஆண்டு வரையில் விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிரான ஏனைய நடவடிக்கைகளின் போது உயிர் நீத்த இந்திய இராணுவத்தினரின் நினைவாக பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளது.

 

By admin