• Sat. May 3rd, 2025

24×7 Live News

Apdin News

யாழில் இராணுவத்தின் பிடியிலிருந்த மக்களின் 40 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!

Byadmin

May 2, 2025


யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த, மக்களுக்கு சொந்தமான 40 ஏக்கர் காணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (01) உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத், விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்களை யாழ். மாவட்ட செயலர் ம.பிரதீபனிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

வசாவிளான் பகுதியில் 20 ஏக்கர் காணிகளும் மாங்கொல்லை பகுதியில் 15 ஏக்கர் நிலங்களும் திக்கம் பகுதியில் 5 ஏக்கர் காணி நிலங்களுமாக சுமார் 40 ஏக்கர் காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மேலதிக அரச அதிபர் (காணி) ஸ்ரீமோகன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர், பருத்தித்துறை பிரதேச செயலர் முதலானோர் கலந்துகொண்டார்.

By admin