4
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையம் அருகில் 500 லீற்றருக்கும் மேற்பட்ட மண்ணெண்ணையை பதுக்கி வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரை காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
அதிகளவான மண்ணெண்ணையை வியாபார நடவடிக்கைகளுக்காக அல்லது பிற தேவைகளுக்காக பயன்படுத்தும் நோக்கில் வாகனத்தின் மூலம் மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையம் அருகில் இருந்து எரிபொருள் கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இது தொடர்பாக பருத்தித்துறை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் வாகனத்தையும் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், அவரின் வாகனம் மற்றும் கைப்பற்றப்பட்ட மண்ணெண்ணை ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இன்றைய தினம் பருத்