யாழ்ப்பாணம், நாவற்குழிப் பகுதியில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஏ 9 வீதி நாவற்குழிப் பகுதியில் வசிக்கும் வயோதிபப் பெண் ஒருவர் வீட்டுக் கிணற்றில் நேற்று நீர் அள்ளும்போது தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
மரணம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி முன்னெடுத்தார்.
மேலும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் வயோதிபப் பெண்ணின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.