• Wed. Dec 25th, 2024

24×7 Live News

Apdin News

யாழில் குடும்பஸ்தர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!

Byadmin

Dec 24, 2024


யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார்.

நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த தேவதாசன் உதயசேனா (வயது 64) என்பவரே உயிரிழந்தார்.

நீர்வேலியில் அமைந்துள்ள வாழைக்குலைச் சங்கத்துக்கு இன்று  திங்கட்கிழமை வாழைக்குலையைக் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அவர் சென்றுகொண்டிருந்தார். இதன்போது அவர் திடீரென வீதியில் மயங்கி வீழ்ந்துள்ளார்.

அவரை யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

இருதய வால்வு சுருக்கம் காரணமாக மரணம் சம்பவித்துள்ளது என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By admin