0
யாழ்ப்பாணம் – கச்சேரி நல்லூர் வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கப் ரக வாகனம் மற்றும் முச்சக்கரவண்டி மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் யாழ். பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.



