• Sat. Feb 22nd, 2025

24×7 Live News

Apdin News

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

Byadmin

Feb 19, 2025


யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை மாம்பழம் சந்தியில், டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளான ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர், 55 வயதுடைய ஆண் ஒருவர் ஆவார்.

யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த நபரின் துவிச்சக்கரவண்டி மீது,  டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விபத்தினை ஏற்படுத்திய சாரதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

By admin