இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை சா.ஜே.வே.செல்வநாயகத்தின் 48 ஆவது நினைவு நாளும் நினைவுப் பேருரை நிகழ்வும் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வநாயகம் நினைவுத் தூபியில் இந்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து சமாதியில் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன்போது தந்தை செல்வாவின் நினைவுப் பேருரையைத் தென்கிழக்குப் பல்கலைக்கழக முதுநிலை முதன்மை பேராசிரியர் கலாநிதி றமீஸ் அப்துல்லா ஆற்றினார்.
The post யாழில் தந்தை செல்வாவின் நினைவேந்தல் நிகழ்வு! appeared first on Vanakkam London.