• Sun. Nov 24th, 2024

24×7 Live News

Apdin News

யாழில் பெண் சட்டத்தரணி வீட்டில் திருட்டு! – இருவர் கைது

Byadmin

Nov 24, 2024


யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் பெண் சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் ஒரு கோடி 40 இலட்சம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணம், பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

கிளிநொச்சியில் பதுங்கியிருந்த ஒருவரும், குறித்த வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணுமே யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் சட்டத்தரணி ஒருவர் வீட்டில் இல்லாத சமயத்தில் 40 பவுண் நகை, பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன களவாடப்பபட்டன .

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில்
யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியட்சர் எம்.எஸ்.ஜரூல் வழிகாட்டலில் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி சமன் பிறேமதிலக தலைமையிலான குழுவினர் மேற்படி சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்தனர்.

சட்டத்தரணி இல்லாத நேரம் தொடர்பாக பிரதான சந்தேக நபருக்கு வீட்டுப் பணிப்பெண் வழங்கிய தகவலுக்கமைய குறித்த களவு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களைக் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

By admin