• Sun. Jan 18th, 2026

24×7 Live News

Apdin News

யாழில் போதைப்பொருளை விற்க முயன்ற இரு இளைஞர்கள் கைது

Byadmin

Jan 18, 2026


யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை விற்பதற்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலணை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், இந்த இருவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அவ்வேளை இருவரது உடைமையில் இருந்தும் 2 கிராம் 350 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 12 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.

இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தவேளை , தமக்கு நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரே போதைப்பொருளை விநியோகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து குறித்த போதை வியாபாரியை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமிருந்து போதைப்பொருளை வாங்குபவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

By admin