• Fri. Jan 10th, 2025

24×7 Live News

Apdin News

யாழில் மண்ணெண்ணெய் அருந்திய ஒரு வயது ஆண் குழந்தை மரணம்!

Byadmin

Jan 10, 2025


யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளது.

கோப்பாய் மத்தி, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தர்சிகன் சஸ்வின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இன்று வியாழக்கிழமை மதியம் தாயார் சமையல் செய்துகொண்டு இருந்தவேளை மேற்படி குழந்தை மண்ணெண்ணெய்யை எடுத்துக் குடித்துவிட்டு, உடலிலும் பூசிவிட்டு விளையாடிக்கொண்டிருந்ததது. இதை அவதானித்த தாயார் குழந்தையைத் தூக்கினார். அப்போது குழந்தை மயக்கமடைந்தது.

பிற்பகல் ஒரு மணியளவில் அந்தக் குழந்தை கோப்பாய் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் பிற்பகல் 4 மணியளவில் உயிரிழந்தது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

By admin