சர்வதேச வலிந்து காணாமல் ஆககப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றத்திலிருந்து செம்மணி நோக்கி பேரணி ஆரம்பமாகியுள்ளது.
இப்போராட்டமானது உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம், தமிழினவழிப்புக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணையைக் கோரி வடகிழக்கில் சனிக்கிழமை (30) முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது அமைப்புக்களும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஒட்டுமொத்த தமிழ்க் கட்சிகளும் இப் போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவை வழங்கி கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post யாழில் வலிந்து காணாமல் ஆககப்பட்டோருக்கு நீதி கோரி மாபெரும் போராட்டம் appeared first on Vanakkam London.