யாழ். மாவட்டத்தில் அனர்த்த நிலைமைகளின்போது மக்களை தங்கவைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த 53 இடைத்தங்கல் முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் ம.பிரதீபன் கூறியுள்ளார்.
தற்போது 6 முகாம்களில் மட்டுமே மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த மாவட்டத்தில் மொத்தமாக 59 முகாம்கள் இயங்கிவந்த நிலையில், அவற்றில் பெருமளவு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
தென்மராட்சி பிரதேசத்தில் மட்டும் 6 முகாம்கள் இயங்கிக்கொண்டிருப்பதாகவும், மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கியுள்ள வெள்ளம் வடிந்த பின்னர் மக்கள் தம் இருப்பிடங்களுக்கு திரும்புவர் எனவும் மாவட்டச் செயலர் கூறியுள்ளார்.
The post யாழில் 6 இடைத்தங்கல் முகாம்கள் மட்டுமே இயங்கும் நிலையில்! appeared first on Vanakkam London.