• Wed. Apr 2nd, 2025

24×7 Live News

Apdin News

யாழ்ப்பாணம் – திருச்சி விமான சேவை ஆரம்பம்

Byadmin

Mar 31, 2025


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் திருச்சி விமான நிலையத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) முதல் ஆரம்பமாகியுள்ளது.

திருச்சியில் இருந்து மதியம் புறப்பட்ட விமானம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த வேளை, விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.

நிகழ்வில் இந்திய துணைத்தூதரகர் சாய் முரளி உள்ளிட்ட துணைத்தூதராக அதிகாரிகள் , விமான நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த விமான சேவையானது தினசரி மதியம் 1.25 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு  , 2.25 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடையும். யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு , திருச்சியை மாலை 4 மணியளவில் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் இருந்து சிங்கப்பூர் பயணிக்க விரும்புவோர் , திருச்சி சென்ற திருச்சி ஊடாக சிங்கப்பூர் பயணிக்க கூடியவாறான விமான சேவை திட்டமிடப்பட்டுள்ளமையால் , கொழும்பு சென்று சிங்கப்பூர் செல்வதற்கான நேர விரயம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin