இந்திய அரசாங்கத்தினதும், இந்திய மக்களினதும் ரமழான் அன்பளிப்புக்களை இஸ்லாமிய சகோதரர்களுக்கு வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.இந்தியத் துணைத் தூதுவர் மாண்புமிகு சாய் முரளி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்துகொண்டு, அன்பளிப்புக்களை மக்களுக்கு வழங்கி வைத்தார்.