• Tue. Apr 22nd, 2025

24×7 Live News

Apdin News

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபவனி

Byadmin

Apr 22, 2025


யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் “வேரிலிருந்து விழுது வரை” ஒன்றிணையும் பொன் விழா சங்கமத்தை முன்னிட்டு நடைபவனி இன்றைய தினம் (21) முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  பேரணி மற்றும் நடைபவனி மேற்கொள்வதற்கு தடை விதித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலில் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, தேர்தல் சார்ந்த நடைபவனி அல்ல என பொலிஸாருக்கு ஏற்பாட்டாளர்கள் தெளிவுபடுத்திய நிலையில், வேட்பாளர்களாக போட்டியிடுபவர்கள் நடைபவனியில் பங்கேற்க முடியாது என்ற நிபந்தனையுடன் நடைபவனி இடம்பெற்றது.

பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கம் முன்பாக ஆரம்பித்த இந்த நடைபவனி பிரதான நுழைவாயில் ஊடாக சென்று பல்கலைக்கழக விஞ்ஞான பீட நுழைவாயிலினூடாக மீண்டும் கலைப்பீடத்தை வந்தடைந்தது.

இந்த நடைபவனியில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா, பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பழைய மாணவர் சங்க நிர்வாகிகள், பல்கலைக்கழக பழைய மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

By admin