• Fri. Aug 15th, 2025

24×7 Live News

Apdin News

யாழ். பல்கலையில் செஞ்சோலைப் படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Byadmin

Aug 14, 2025


செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்போது கொல்லப்பட்டவர்களின் உருவப் படங்களுக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பகுதியில் இருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி விமானப் படையினர் மேற்கொண்ட விமானக் குண்டு வீச்சில் 54 மாணவிகளும் 7 பணியாளர்களுமாக 61 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 150 இற்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post யாழ். பல்கலையில் செஞ்சோலைப் படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு (படங்கள் இணைப்பு) appeared first on Vanakkam London.

By admin