நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 17 சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என்ற கட்டமைப்பில் உள்ளூர் அதிகார சபைகள் இருக்கின்றன.
இந்தச் சபைகளில் உள்ள 243 வட்டாரங்களில் இருந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 3 ஆயிரத்து 519 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிலிருந்து போட்டியிடுகின்றனர்.
யாழ். மாவட்டத்தில் மக்கள் தமது வாக்குகளை அளிப்பதற்காக 517 வாக்களிப்பு நிலையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இதேநேரம் 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அத்துடன் தேர்தல் கடமைகளுக்காக 6 ஆயிரத்து 320 அதிகாரிகளும், 1048 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமையாற்றவுள்ளனர்.
இதேநேரம் யாழ். மாவட்டத்தில் 243 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலுக்கான போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
இலங்கை போக்குவரத்துச் சபையின் 50 பஸ்களும், 143 தனியார் பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, இடம்பெயர்ந்து பருத்தித்துறை பிரதேசத்தில் வசிக்கும் வாக்காளர்களை ஏற்றி வருவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு பகுதிகளுக்குக் கடற்படையினர் படகு போக்குவரத்து ஒழுங்களைச் செய்துள்ளனர்.
The post யாழ். மாவட்டத்தில் 17 சபைகளுக்கு 3,519 வேட்பாளர்கள் போட்டி! appeared first on Vanakkam London.