• Sat. Jan 4th, 2025

24×7 Live News

Apdin News

யாழ். வடமராட்சியில் வயோதிபரின் சடலம் மீட்பு!

Byadmin

Jan 1, 2025


யாழ். வடமராட்சியில் தனிமையில் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உச்சிக்காடு, கரணவாய் தெற்கைச் சேர்ந்த மாணிக்கம் குணசேகரம் (வயது – 65) என்ற வயோதிபரே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

இரண்டு பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இவர், தனிமையில் வசித்து வந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை கட்டிலில் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற கரவெட்டி மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

இது தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

The post யாழ். வடமராட்சியில் வயோதிபரின் சடலம் மீட்பு! appeared first on Vanakkam London.

By admin