யுக்ரேனில் ரஷ்யா நடத்திய தாக்குதல் – நூலிழையில் தப்பிய பெண்
யுக்ரேனின் கியேவ் பகுதியில் வசிப்பவர் டெட்டியானா. தன் வீட்டின் நுழைவாயிலில் நின்றபடி, வெளியே செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது வீடு தாக்குதலுக்கு உள்ளானது.
அவரும் அவரது குடும்பத்தினரும் காயமின்றி தப்பினர். ஆனால், வீடு சேதமடைந்தது.
கியேவ்வில் அக்டோபர் 10ம் தேதி ரஷ்யா நடத்திய தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு